பிதாவில் வேரூன்றியவர்கள்
ஆரோகண பாடல்.
நம்பிக்கை ஒரு நிலப்பரப்பாக விவரிக்கப்படுகிறது. நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல அசையாதவர்கள்; மலைகள் எருசலேமைச் சூழ்ந்திருப்பதுபோல எங்கள் பிதா அவர்களைச் சூழ்ந்திருக்கிறார். துன்மார்க்கரின் ஆட்சி இந்த தேசத்தின்மேல் நிலைத்திருக்காது, ஏனெனில் அது நல்லவர்களையும் தவறு செய்யத் தூண்டிவிடும்.
125 1எங்கள் பிதாவை நம்புகிறவர்கள் அசைக்கப்படாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் சீயோன் மலையைப் போலிருப்பார்கள். 2மலைகள் எருசலேமைச் சூழ்ந்திருக்கிறதுபோல, எங்கள் பிதா இப்பொழுதும் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சூழ்ந்திருக்கிறார். 3நீதிமான்கள் அநியாயம் செய்யத் தங்கள் கைகளை நீட்டாதபடி, அவர்களுக்குப் பங்கிடப்பட்ட தேசத்தின்மேல் துன்மார்க்கத்தின் செங்கோல் தங்கியிராது. 4எங்கள் பிதாவே, நல்லவர்களுக்கும், தங்கள் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும். 5தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்ந்துபோகிறவர்களையோ, எங்கள் பிதா அக்கிரமக்காரரோடேகூடத் தள்ளிப்போடுவார். இஸ்ரவேலின்மேல் சமாதானம் உண்டாவதாக!